புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம்: கனிமொழி எம்.பி கண்டனம்


புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம்:  கனிமொழி எம்.பி கண்டனம்
x

இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில்,

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story