புதுச்சேரி: போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் திருட்டு


புதுச்சேரி: போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் திருட்டு
x

புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் திருடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் ஆவார்.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் காணாமல் போயுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் ஆதரவாளரை சந்திக்க சென்றபோது செல்போனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

திருடி செல்லப்பட்ட செல்போனை மர்மநபர் டிஆர் பட்டினம் எனும் இடத்தில் ஆன் செய்தார். அப்போது, போலீசார் செல்போனின் எண்ணை ஆய்வு செய்து அந்த இடத்திற்கு சென்று மர்ம நபரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story