புதுக்கோட்டையில் வெயிலும்... மழையும்...
புதுக்கோட்டையில். மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசாக தூறல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலையில் சிறிது தூறல் மழை பெய்தது. அதன்பின் வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் மீண்டும் தூறல் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் இந்த மழை பெய்தது. அதன்பின் மீண்டும் சூரிய வெளிச்சம் தென்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வடகிழக்கு பருவ மழையில் கன மழையோ, பரவலான மழையே பெய்ய வேண்டிய நேரத்தில் புதுக்கோட்டையில் மழை பெய்வதும் பின்னர் வெயில் அடிப்பதுமான சீதோஷ்ண நிலையாக காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-2, பெருங்களூர்-12, புதுக்கோட்டை-8, ஆலங்குடி-2, கந்தர்வகோட்டை-2, கறம்பக்குடி-4.20, கீழணை-9.20, திருமயம்-20, அறந்தாங்கி-19.60, ஆயிங்குடி-5, நாகுடி-9.80, ஆவுடையார்கோவில்-22.80, மணமேல்குடி-4, விராலிமலை-13, பொன்னமராவதி-9.