புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

கல்லூரியில் இளங்கலையில் 25 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,350 இடங்கள் உள்ளன. இரு பாலர் கல்லூரியான இதில் படிக்க மாணவ-மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு இக்கல்லூரியில் சேர்வதற்காக ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்விற்கு மாணவ-மாணவிகள் வரவழைக்கப்படுகின்றனர்.

கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுக்கும், பி.எஸ்.சி. உடற்கல்வியியல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் நாகேஸ்வரன் தலைமையிலான பேராசிரியர், பேராசிரியைகள் குழுவினர் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை சாிபார்த்து சேர்க்கை நடத்தினர். தொடர்ந்து கலந்தாய்வு வருகிற 9-ந் தேதி வரை பாட வாரியாக நடைபெற உள்ளது.


Next Story