புதுக்கோட்டையில் பகலில் வெயில்... இரவில் மழை...


புதுக்கோட்டையில் பகலில் வெயில்... இரவில் மழை...
x

சீதோஷ்ண நிலையில் மாற்றம் அடைந்ததால் புதுக்கோட்டையில் பகலில் வெயில் அடிக்கிறது, இரவில் மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை

பரவலாக மழை

புதுக்கோட்டையில் வட கிழக்கு பருவ மழை காலக்கட்டத்தில் தான் அதிக மழை பெய்யும். தென் மேற்கு பருவ மழை காலக்கட்டத்தில் பரவலாக மழை பெய்யும். இந்த நிலையில் தற்போது தென் மேற்கு பருவ மழை காலம் தொடங்கிய நிலையில் புதுக்கோட்டையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரத்திற்கு மேல் இரவில் மழை பெய்கிறது.

புதுக்கோட்டையில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் இன்று இரவில் மழை பெய்தது. சீதோஷ்ண நிலையில் மாற்றம் காரணமாக இது போன்று மழை பெய்து வருவதாகவும், மேலும் 3 நாட்கள் இதுபோல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

புதுக்கோட்டை-23, ஆலங்குடி-5, கறம்பக்குடி-2.20, கீழணை 18.20, திருமயம்-10.20, அரிமளம்-45.40, அறந்தாங்கி- 85.30, ஆயிங்குடி-60.20, நாகுடி-47.60, மீமிசல்-6.80, ஆவுடையார்கோவில்-53.40, மணமேல்குடி-8, குடுமியான்மலை-4, அன்னவாசல்-1, பொன்னமராவதி-26, காரையூர்-6.

22 வீடுகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அறந்தாங்கி பகுதியில் அதிகபட்சமாக மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மழையினால் அப்பகுதியில் குடிசைகள் உள்பட 22 வீடுகள் சேதமடைந்தன.


Related Tags :
Next Story