புதுப்பட்டு மங்கள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புதுப்பட்டு மங்கள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:13 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பட்டு மங்கள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், மங்களமாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மங்கல இசை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பனம், முதல் காலயாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் புதுப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story