அஷ்டலட்சுமி பூஜை
அஷ்டலட்சுமி பூஜை நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அஷ்டலட்சுமி பூஜை நடைபெற்றது. தை மாதத்தில் ஆரிய வைசிய மகிளா சபா சார்பில் மகளிர் குழுவினர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அஷ்டலட்சுமி பூஜை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்த பூஜையில் தனம், குழந்தைபேறு, தானியம், வீரம், அன்பு, ஆரோக்கியம், வெற்றி, புகழ் உள்ளிட்ட அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க அஷ்டலட்சுமி பூஜை நடைபெறும். விழா ஆரிய வைசிய மகிளா சபா தலைவி நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த பூஜையில் அஷ்டலட்சுமிகளான ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலெட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகள் அலங்கரிக்கப்பட்டு 108 போற்றி திருவுருள் சொல்லப்பட்டது. பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி நிறைவில் பெண்கள் அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய மங்கல பொருட்கள் தாம்பூல தட்டில் வைத்து வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.