புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

ஆபத்தான மின்கம்பம்

கோபி அருகே உள்ள கொளப்பலூர் காமராஜ் நகரில் மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் விரிசலும் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொளப்பலூர்.

கற்கள் அகற்றப்படுமா?

அந்தியூர் தவிட்டுபாளையம் சத்தி ரோட்டில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் கற்கள் குவியலாக கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக கற்கள் காணப்படுகின்றன. உடனே ரோட்டின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கிருஷ்ணன், அந்தியூர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது பகுதிக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் சாலையோரமாக தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்பவர்களின் மீது தெறிக்கிறது. எனவே கழிவுநீர் வெளியேறாமல் இருக்க சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முத்தம்பாளையம்.

வீணாகும் குடிநீர்

கோபியில் இருந்து மொடச்சூர் செல்லும் ரோட்டில் சிவசண்முகம் வீதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக ஓடு, செங்கல், கற்கள் போட்டும் மூடியுள்ளனர். உடனே அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

பாராட்டு

கோபி அக்ரஹாரம் கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் தோண்டப்பட்ட கழிவுநீர் குழி மூடப்படாமல் இருந்தது. இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கழிவுநீர் குழி மூடப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாதன், கோபி



Next Story