புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வீணாகும் குடிநீர்

ஈரோடு மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு ரோட்டு ஓரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரின்றி பெரும் சிரமப்படுகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருந்து நல்லியம்பாளையம் செல்லும் சாலையில் டினி வில்லேஜ் பகுதி உள்ளது. இங்குள்ள மின்கம்பம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையிலும், ஆங்காங்கே விரிசல் விழுந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. ஆகவே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

மின்கம்பிகளில் செடி, கொடிகள்

மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் கிராமம் ஆனைக்கல்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியும், பொதுமக்கள் நின்று தண்ணீர் பிடிக்கும் வகையில் குழாயும் உள்ளது. இதன் அருகே செல்லும் மின்கம்பிகள் மீது மரம், செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே அவற்றை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆனைக்கல்பாளையம்.

தேங்கியிருக்கும் கழிவுநீர்

புஞ்சை புளியம்பட்டியில் செல்லும் பவானிசாகர் ரோட்டில் எஸ்.ஆர்.டி.நகர் பின்புறம் உள்ள வீதிகளில் சாக்கடைகளில் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எஸ்.ஆர்.டி. நகரில் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார்களா?

பொதுமக்கள், எஸ்.ஆர்.டி. நகர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பி

பவானி திருவள்ளுவர் நகர் 7-வது வார்டில் ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சாமி ஊர்வலம் அல்லது தேர் பவனி நடக்கும்போது மின்கம்பிகளில் உரசிவிட்டால் பேராபத்து ஏற்பட்டு விடும். மின்வாரிய அதிகாரிகள் இதை உடனே சரிசெய்யவேண்டும்.

பொதுமக்கள், பவானி திருவள்ளுவர் நகர்.

பாராட்டு

இக்கரை நெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு கெஞ்சனூரில் மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து விழும் நிலையில் ஆபத்தாக காணப்பட்டது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சுற்றி கான்கிரீட் பூசி பராமரித்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம்.

பொதுமக்கள், இக்கரை நெகமம்.


Next Story