புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

வடிகால் வசதி

அந்தியூர் பருவாச்சியை அடுத்த அம்மன்பாளையம் அருகே ஓடை உள்ளது. இதில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அம்மன்பாளையம் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அம்மன்பாளையம்.

ஆபத்தான மின்கம்பிகள்

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 8-வது வார்டில் உள்ளது பெரியசேமூர். இங்குள்ள கன்னிமார் நகர் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக வீட்டின் மேல் செல்கிறது. இதனால் மின்கம்பிகள் வீடுகளின் மீது உரசி தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பிகளை உயரத்தில் செல்லும் வகையில் மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

பொதுமக்கள், ஈரோடு.

பணிவிரைந்து முடியுமா?

கோபியில் இருந்து கரட்டடிபாளையம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் இன்னும் அகலப்படுத்தும் பணியை முடிக்கவில்லை. இதனால் ரோடு மோசமாக காணப்படுகிறது. அந்த பகுதியில் கருப்பராயன் கோவில் எதிரில் உள்ள கடைகளுக்கு செல்ல சிரமமாக உள்ளது. மேலும் கடைகளுக்கு அருகே சாக்கடை கழிவுகளும் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், கோபி.

பாதியில் நிற்கும் பணி

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுமேட்டூரில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. தற்போது பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். இதனால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் சாக்கடை வடிகாலை முழுமையாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், புதுமேட்டூர்.

பாராட்டு

பெருந்துறை வாய்க்கால்மேடு கே.கே.நகரில் மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உடனே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வாய்க்கால்மேடு.

புகார் பெட்டி


Next Story