புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

பழுதான நிழற்குடை

நம்பியூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உள்பட்டது புதுசூரிபாளையம். இங்குள்ள நிழற்குடை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். உடனே பஸ் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம் வடிவேல், புதுசூரிபாளையம்.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

அந்தியூர் பிரம்மதேசம் பாலம் அருகே மின்கம்பம் உள்ளது. இதை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து மறைத்தபடி காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் மரக்கிளைகளில் பட்டு உராய்ந்து மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை சுற்றி காணப்படும் மரம், செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகுபதி, பிரம்மதேசம்.

தூய்மையில்லா கழிப்பறை

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.ஓ.மா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரமின்றி காணப்படுகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி, புஞ்சைபுளியம்பட்டி.

வர்ணம்பூச வேண்டும்

அந்தியூர் அருகே உள்ள மூலக்கடையில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால் அவற்றின் மீது பூசப்பட்ட வெள்ளை வர்ணம் அழிந்துவிட்டது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் புதிதாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் மோதி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். உயிரிழப்பும் நேர வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு வாகன ஓட்டிகள் நலன் கருதி வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசாமி, அந்தியூர்.

வாகனஓட்டிகள் அவதி

ஈரோடு கனிராவுத்தர் குளம்-வில்லரசம்பட்டி செல்லும் ரோட்டோரம் சாக்கடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால் சாக்கடை வடிகால் அமைக்காமல் மண்ணை மட்டும் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் கால்நடைகள் விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனே சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

ஆபத்தான மின்கம்பம்

pukaar
வையாபுரி சந்து நுழைவாயில் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொடுமுடி.

-----------------


Next Story