புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வீணாகும் குடிநீர்

கோபியில் புதிய ஆஸ்பத்திரி ரோட்டில் நகராட்சி பூங்காவுக்கு செல்லும் ரோடு பிரிவு வருகிறது. அந்த பிரிவு பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் செல்வதுடன், அந்த பகுதியில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாக வெளியேறி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த சாலை

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் பெரியமொடச்சூர் செல்லும் ரோடு உள்ளது. அந்த ரோட்டில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் உள்ள மேடு பள்ளத்தை கவனிக்காமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே பழுதடைந்து மேடும், பள்ளமுமாக காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

ஆபத்தான குழி

அந்தியூரை அடுத்த வேம்பத்தி அருகே உள்ள ஓசைப்பட்டி பகுதியில் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் குறுக்கே கழிவுநீர் செல்வதற்காக சிறுபாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த சிறுபாலத்தில் ஓட்டை விழுந்து ஆபத்தான குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைந்து உள்ளனர். எனவே இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

கனகராஜ், ஓசைபட்டி.

முடிவடையாத சாலைப்பணி

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டில் கோம்புபள்ளம் அருகே கொத்தமங்கலம் ரோட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையின் ஒரு பகுதியில் பணி முழுமையாக முடியவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பாரதிராஜா, சத்தியமங்கலம்.

மேடும் பள்ளமுமான சாலை

கோபியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் கோபி நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த ரோட்டில் ஒரு இடத்தில் குழி தோண்டப்பட்டு அது மூடப்பட்டு உள்ளது. ஆனால் குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு பழுதடைந்து மேடும், பள்ளமுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரவு ேநரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குப்பை அகற்றப்படுமா?

கோபியில் இருந்து ஓலப்பாளையம் வழியாக கொள்ளுக்கட்டிபாளையம் ரோடு செல்கிறது. அந்த ரோட்டின் ஓரமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் பறந்து வந்து விழுகிறது. எனவே ரோட்டோரம் குவிந்து உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

விபத்தை உண்டாக்கும் ரோடு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சென்னம்பட்டி முதல் கொமராயனுர் தொட்டி கிணறு வரை செல்லும் ரோடு ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டி கிணறு-கொளத்தூர் ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், சென்னம்பட்டி.

எப்போது தார் போடுவார்கள்?

நம்பியூரில் செல்லும் சத்தியமங்கலம் ரோடு பழுதாகி குண்டும்-குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்க ஜல்லிகள் கொண்டு வந்து கொட்டி சமன்படுத்தினார்கள். அதன்பின்னர் அப்படியே விட்டுவிட்டார்கள், தார்சாலை போடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அந்த ரோட்டில் நடந்து கூட செல்ல முடியவில்லை. கற்கள் குத்துகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம்பியூர் சத்தி ரோட்டில் விரைந்து தார்சாைல அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், நம்பியூர்.



Next Story