புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

குவிந்து கிடக்கும் குப்பைகள்

ஈரோடு அண்ணா தியேட்டர் செல்லும் சாலையில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று அடிக்கும் போது குப்பைகள் பறந்து அருகில் உள்ள விசைத்தறி கூடம் மற்றும் வீடுகளுக்குள் விழுந்து விடுகிறது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி, ஈரோடு.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் ரோடு முழுவதும் ஆறு போல் காட்சி அளிக்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், ஈரோடு.

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

ஈரோடு வளையக்கார வீதி பகுதியில் காலிங்காரயன் வாய்க்கால் செல்கிறது. அங்கு உள்ள பாலம் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த வாய்க்காலை கடந்து செல்வோர் வாய்க்காலுக்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. மேலும் ஆடுகளும் உள்ளே விழுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வாய்க்கால் பாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, ஈரோடு.

ஆபத்தான குழி

ஈரோடு சொக்கநாத வீதியில் தரை மட்ட மேம்பாலம் புனரமைப்பதற்கு அந்த பாலத்தை தோண்டினார்கள். ஆனால் அதை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடந்த 2 மாதங்களாக பணி நடைபெறாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதனால் இந்த குழியில் பலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். மேலும் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே இந்த பாலத்தை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

சேகர், ஈரோடு.


முடிவடையாத சாலைப்பணி

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டில் கோம்புபள்ளம் அருகே கொத்தமங்கலம் ரோட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையின் ஒரு பகுதியில் பணி முழுமையாக முடியவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பாரதிராஜா, சத்தியமங்கலம்.



Next Story