புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

விபத்தை ஏற்படுத்தும் குழி

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் பிரிவு ரோட்டில் மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு குழி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழியில் இறங்கி தவறி கீழே விழுந்துவிட நேரிடுகிறது. தற்போது மழை பெய்துள்ளதால் குழியில் தண்ணீர் தேங்கி இருப்பதே தெரிவதில்லை. அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழியை மூடுவதற்கு ஆவன செய்வார்களா?

சந்திரன், அந்தியூர்.

தேங்கும் கழிவுநீர்

கோபி கிருஷ்ணன் வீதியில் இருந்து கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் ஓரிடத்தில் முறையான சாக்கடை வசதி இல்லை. அதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டியில் நிரம்பி வெளியே வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் சென்று பார்த்து உடனே அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், கோபி.

சுகாதார சீர்கேடு

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் காமராஜர் கலானியில் சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே காமராஜர் காலனியில் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார வேண்டும்.

பொதுமக்கள், ஆப்பக்கூடல்

குடிநீர் குழாயில் உடைப்பு

கொடுமுடியில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் உடனே அங்கு சென்று, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், கொடுமுடி.

நூலகம் வேண்டும்

கொடுமுடியை அடுத்துள்ள சோளக்காளிபாளையத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள் பலர் உள்ளனர். மேலும் அதிக அளவில் மாணவ, மாணவிகளும் இருக்கின்றனர். ஆனால் சோளக்காளிபாளையத்தில் நூலகம் இல்லை. அதனால் அரசின் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வாசிப்பு பழக்கத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகம் அமைத்து தருவார்களா?

பொதுமக்கள், சோளக்காளிபாளையம்.

பாராட்டு

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 11-வது வார்டுக்கு உள்பட்ட சரோஜினி தெருவில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாமல் இருந்தது. குடிநீர சீராக வினியோகிக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்து சீராக குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டிNext Story