புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

பழுதான சாலை

கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த ரோட்டில் அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்றபடி இருக்கும், மாணவ, மாணவிகளும் சைக்கிளில் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சாலைப்புதூர்.

தெரு நாய்கள் தொல்லை

அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. திடீரென நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் பாய்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகிறார்கள். சில நேரங்களில் நடந்து செல்பவர்களையும் கடிக்க பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், அந்தியூர்

பராமாிப்பின்றி காணப்படும் பூங்கா

பவானிசாகாில் பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பொியவா்கள் வரை சென்று வருகின்றனா். ஆனால் பூங்கா போதிய பராமாிப்பின்றி காணப்படுகிறது. குப்பைகள் குவிந்து அசுத்தமாக உள்ளது. உடனே பூங்காவை பராமாிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானிசாகர்

புதர்களை அகற்ற வேண்டும்

அவல்பூந்துறையில் இருந்து கண்டிக்காட்டுவலசு வரை சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் புதர்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக இரவில் நடந்து செல்வதற்கு பெண்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அவல்பூந்துறை.

குடிநீர் வசதி வேண்டும்

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுத்திகாிப்பு எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு தினமும் பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் குடிநீாின்றி சிரமப்படுகிறார்கள். உடனே சுத்திகாிப்பு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சாிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்

பஸ் இயக்க வேண்டும்

பெருந்துறையை அடுத்த பெரியவிளாமலை அருகே கண்ணவிளாம்பாளையம், செங்காளிபாளையம், இச்சிவலசு, எருக்காட்டுவலசு அகிய ஊர்கள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். உடனே பஸ் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பெரியவிளாமலை

மின்விளக்கு பொருத்தப்படுமா?

கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தில் அரசு ஆஸ்பத்திாி சாலையில் கிழக்கு வீதியில் மின்கம்பம் உள்ளது. இதில் மின் விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோளக்காளிபாளையம்.


Next Story