புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வீணாகும் குடிநீர்

ஈரோடு சத்திரோட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலை அமைக்க குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகனசுந்தரம், ஈரோடு.

குப்பைதொட்டி வேறுஇடத்தில் வைக்கப்படுமா?

வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பொம்மன்பட்டியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இதன் கீழ் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் போது குப்பைத்தொட்டியில் படுகிறது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைத் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வெள்ளித்திருப்பூா்.


ரோட்டை ஆக்கிரமித்த முட்செடிகள்

சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரில் பஸ், லாாி, காா், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் வரும் போது ஒதுங்க சிரமமாக உள்ளது. அவ்வாறு ஒதுங்கினால் இருசக்கர வாகன ஒட்டிகளின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்படுகிறது. உடனே முட்புதா்களை அகற்றவும். ரோட்டை அகலப்படுத்தவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயேந்திரன், பொியூா்.

நிழற்குடை அமைக்கப்படுமா?

நம்பியூர் அருகே குருமந்தூர் மேடு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகவு‌ம் சிரமப்படுகிறார்கள். எனவே நிழற்குடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், குருமந்தூர் மேடு.


பஸ் இயக்க வேண்டும்

அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி, கணக்கம்பாளையம் வழியாக கோபி செல்வதற்கு ஏ20 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா 2-ம் அலைக்கு பிறகு அனைத்து பஸ்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், ஏ20 என்ற டவுன் பஸ் மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் ஏ20 டவுன் பஸ்சை அனைத்து நாட்களிலும் அத்தாணி வழியாக கோபிக்கு இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், அந்தியூர்.

-------------------


Next Story