புள்ளம்பாடி வடக்கு, கல்லக்குடி பேரூர் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
புள்ளம்பாடி வடக்கு, கல்லக்குடி பேரூர் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
புள்ளம்பாடி வடக்கு மற்றும் கல்லக்குடி பேரூர் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கல்லக்குடி கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா தலைமை தாங்கினார். கூட்டத்தில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றியசெயலாளர் வெள்ளனூர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லக்குடி பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்டசெயலாளர் வைரமணி பேசும்போது, தி.மு.க. ஆட்சியில் லால்குடி தொகுதி அதிக வளர்ச்சி திட்டங்களை பெற்றுள்ளது. குறிப்பாக கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம், தீயணைப்பு நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. தடுப்பணைகள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரெட்டிமாங்குடியில் ரூ.248 கோடியில் புதிய கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் தரைமட்ட சம்பு அமைக்கப்பட்டு, அங்கிருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார். தலைமை கழக பேச்சாளர் திருச்சி ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் நலதிட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன், மாவட்டகவுன்சிலர் ஜெயலெட்சுமி கருணாநிதி, புள்ளம்பாடி நகர இளைஞரணி தியாகு, கல்லக்குடி அவைத்தலைவர் ஜான், ஒன்றிய நிர்வாகிகள் இந்திராஅறிவழகன், உலகநீதி, பூமி, ராஜமாணிக்கம், வெற்றிச்செல்வி ராமலிங்கம், பெரியசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சையதுஒலி என்கிற சேட்டு நன்றி கூறினார்.