புள்ளம்பாடி ஒன்றியக்குழு கூட்டம்


புள்ளம்பாடி ஒன்றியக்குழு கூட்டம்
x

புள்ளம்பாடி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை அலுவலர் மனோஜ்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பொது செலவீனங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 15 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியக்குழு துணை தலைவர் கனகராஜ் வரவேற்று, நன்றி கூறினார்.


Next Story