பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்


பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்
x

பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்

திருவாரூர்

பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருத்தி சாகுபடி

மனிதனுடைய உணவில் முக்கிய பங்கு வகிப்பது புரதசத்து. இவை பயறு வகை பயிர்களில் இருந்து தான் கிடைக்கிறது. பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

பருத்தியில் ஊடுபயிராக மற்ற பயிர்களை பயிர் செய்வதாக இருந்தால் ஒரு வரிசையில் பருத்தியையும், அடுத்த மூன்று வரிசைகளுக்கு ஊடுபயிரை பயிர் செய்யலாம். இதனால் பருத்தியை தனிபயிராக பயிரிடும்போது கிடைக்கும் பயிர் எண்ணிக்கையை பெறுவதுடன் ஊடுபயிர் மூலமாக கூடுதல் மகசூல் பெற முடியும்.

இருமடங்கு வருவாய்

பருத்தி சாகுபடியுடன் ஊடுபயிராக பயறு வகை பயிர்களை விதைப்பதன் மூலம் 2 முதல் 3 மாத காலத்தில் பயறுவகை பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும். இந்த ஊடுபயிர் முறையில் பயறு வகை பயிர்கள் மற்றும் பருத்தி இரண்டின் மூலம் ஆண்டு முழுவதும் இருமடங்கு வருவாய் கிடைப்பதால் இழப்பு ஏற்படுவதில்லை.

ஊடுபயிர்களான உளுந்து, பச்சை பயறு, தட்டைபயறு, சோயா வகைகளை பயிர் செய்யலாம். மேலும் உளுந்து, பச்சை பயறு விதையளவு ஒரு எக்டேருக்கு 12.5 கிலோவும், தட்டைப்பயறு 7.5 கிலோவும் மற்றும் சோயா 20 கிலோவும் சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story