பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை


பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை
x

ஆரணி அருகே பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 46), பனையூர் ஊராட்சியில் பம்பு ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இவர் நீண்ட காலமாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் இன்று அதிகாலை வீட்டின் அருகே சென்று விஷம் குடித்து கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மகன்கள், மனைவி, உறவினர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் குப்புசாமியின் தந்தை மணி புகார் கொடுத்தாார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story