கருவலூர் மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேகம் நடத்த பூமிபூஜை
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் கருவலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்னதான மண்டபம் வாகன மண்டபம், பக்தர்கள் இளளப்பாறும் மண்டபம், திருச்சுற்று மண்டபம், தரைதளங்களில் கல்தளம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்காக நேற்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூமிபூஜை கால்கோல் விழா நடந்தது. இதில் கருப்புசாமி கவுண்டர், கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அவினாசியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூமிபூஜைக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வெ.லோகநாதன், அறங்காவலர் அர்ச்சுனன், கோவில் செயல் தலைவர் குழந்தைவேலு ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story