புஞ்சைபுளியம்பட்டி கோவில் விழாவில் மூதாட்டியிடம் நகை திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி கோவில் விழாவில் மூதாட்டியிடம் நகை திருட்டு போனது.
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 68). இவர் கடந்த 6-ந் தேதி மாரியம்மன் கோவிலில் நடந்த அம்பு சேர்வை திருவிழாவின்போது சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை திடீரென காணவில்லை. அவர் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர்கள் நைசாக திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story