புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி ஆண்டு விழா


புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி ஆண்டு விழா
x

புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கல்லூரி வளாகத்தில் 16-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அன்னை ஸ்ரீ அரவிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை தாங்கினார் தலைவர் தங்கராஜ், செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் பயன்பாட்டியல் துறைத்தலைவர் சுபஸ்ரீ வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சாருமதி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினரை இயற்பியல் துறை தலைவர் சுரேகா அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொண்டு மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். விழாவில் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் ராமமூர்த்தி, மாரியப்பன், பிற அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் தெய்வானை நன்றி கூறினார்.


Next Story