புன்னம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு


புன்னம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு
x

கவுன்சிலர்கள் வராததால் புன்னம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில், புன்னம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. இதில் வாக்களிப்பதற்காக தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் வந்தனர். ஆனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் 5 பேர் வரவில்லை. இதனால் பகல் 11 மணியளவில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலருமான பரமேஸ்வரன் அறிவித்தார். அதனை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story