சாயஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு


சாயஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் மனு
x
திருப்பூர்


திருப்பூர் அருகே கரைபுதூர் ஊராட்சியில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுகொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னாங்கல்பாளையத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்கு சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 26-1-2020-ந்தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாய ஆலை அமைய உள்ள இடத்திலிருந்து 40 மீட்டர் தொலைவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் அருகிலேயே குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். பாய்லர் சத்தமும், ரசாயன வாடையும் அருகாமையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பெரிதும் அவதியை ஏற்படுத்துவதோடு பள்ளி செயல்படுவதற்கே இடையூறாக அமையும்.மேலும் 300 மீட்டர் சுற்றளவிற்குள் விவசாயிகள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணறுகளும் உள்ளது. இங்கு சாயஆலை அமைந்தால் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடும். இந்த இடத்தில் சாயஆலை அமைப்பதற்காக பயன்படுத்துவது தெரிய வருகிறது. இது கிராம சபை தீர்மானத்திற்கு எதிரானதாகும். ஏற்கனவே கட்டிட அனுமதியை ரத்து செய்ய வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைக்கும் கட்டிட அனுமதி ரத்து செய்யப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியும் கிராம சபை தீர்மானத்திற்கு எதிராகவும், சாய ஆலை அமைக்கப்படாது என்று கூறிவிட்டு தற்போது கட்டிடம் கட்டும் சாய ஆலைக்கு வழங்கிய அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story