கலைஞரின் மக்கள் சேவை முகாம்
கலைஞரின் மக்கள் சேவை முகாம்
காங்கேயம்
கலைஞரின் மக்கள் சேவை முகாம் நேற்று சிவன்மலையில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கலைஞர் மக்கள் சேவை முகாம் நேற்று சிவன்மலை ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சிவன்மலையில் முதற்கட்டமாக பொதுமக்களுக்கான கலைஞர் மக்கள் சேவை முகாமானது நடத்தப்பட்டது.இம்முகாமானது மருத்துவ காப்பீடு விண்ணப்பித்தல், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை விண்ணப்பித்தல், முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவி தொகை, மகளிர் திட்டம், ஆதார் அட்டை, தொழில் சார்ந்த அடையாள அட்டை விண்ணப்பித்தல், முதியவர் உதவி தொகை விண்ணப்பித்தல், இசேவை என 27 சேவைகளுக்கான முகாம் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றது.இம்முகாம் அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிவன்மலையில் தொடங்கப்பட்டதோடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.