நாய்க்குட்டியின் பிறந்த நாள் 'கேக்' வெட்டி கொண்டாட்டம்
திருச்செந்தூர் அருகே நாய்க்குட்டியின் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டிக்கு `பப்பு' என பெயர் வைத்துள்ளார்.
நாய்க்குட்டி பிறந்து 5 வயதை எட்டிய நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக 'கேக்' வாங்கி அதில், "கேப்பி பெர்த் டே பப்பு" என எழுதி வைத்திருந்தார். பின்னர் வீட்டில் வைத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நாய்க்குட்டிக்கு 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அதில் முதல் கேக் துண்டை பப்புவுக்கு ஊட்டினார்.
வீட்டு வளர்ப்பு செல்லப்பிராணியான நாய்க்குட்டிக்கு 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அந்த கிராமத்தில் வியப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story