புரட்டாசி 2-வது சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


புரட்டாசி 2-வது சனிக்கிழமை:  கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஈரோடு

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் (கஸ்தூரி அரங்கநாதர்) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோவில் நடை நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், குங்குமம், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷம் நடந்தது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


Next Story