முப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா


முப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் முப்புடாதி அம்மன் வழிபாடு குழுவினரின் பஜனை, சமய சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு, 1008 திருவிளக்கு பூஜை, நவீன வில்லிசை, பல்சுவை நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. 7-ம் திருநாளான 9-ந் தேதி இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, நள்ளிரவு 1 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story