படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா


படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா
x

படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா 23-ந் தேதி தொடங்குகிறது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா 23-ந் தேதி தொடங்குகிறது.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு கோட்டைமலை மீது அமைந்துள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் 48-ம் ஆண்டாக புரட்டாசி உற்சவ திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்கி அக்டோபர் 21-ந் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 1 மணி அளவில் பஜனை கோஷ்டி நடக்கிறது.

சனிக்கிழமைகளில் அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது. அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

23-ந் தேதி சாமிக்கு சீனிவாசர் அலங்காரம், 30-ந் தேதி நர்தன கிருஷ்ணர் அலங்காரம், அக்டோபர் 7-ந் தேதி சனிக்கிழமை, வைகுந்தநாதன் அலங்காரம், 14-ந் தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 21-ந் தேதி வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

மாலை வேளை உற்சவர் படவேட்டில் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story