அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
x

காரையூர் அருகே அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் ேகாவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆவாம்பட்டியில் மண்ணால் செய்யப்பட்ட அரண்மனை குதிரை, புரவி சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, மேலத்தானியம், சூரப்பட்டி, வெள்ளையக்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி, வடக்கிப்பட்டி உள்ளிட்ட எட்டுப்பட்டி கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.


Next Story