ஆனைமலை விற்பனைக்கூடத்தில் 1,226 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்-அதிகாரிகள் தகவல்
ஆனைமலை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டில் 1,226 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை
ஆனைமலை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டில் 1,226 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,226 டன்
ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து உலர்த்தி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
கொப்பரை தேங்காய் ஏலத்தில் பங்கேற்க வெள்ளகோவில், காங்கேயம், ஒட்டன்சத்திரம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பங்கேற்றனர். நடப்பாண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ஆனைமலை ஒன்றிய பகுதியில் உள்ள 4,289 விவசாயிகள் 28,023 மூட்டைகளில் 1,266 டன் கொப்பரை தேங்காயை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.
ரூ.9¾ கோடி
இதன் மதிப்பு ரூ.9 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரத்து 256 ஆகும். மத்திய அரசால் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது. இதில் ஒரு கிலோ கொப்பரை 150 ரூபாய் 90 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கொப்பரை தேங்காயில் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கும் கீழ் இருக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.