19,122 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்


19,122 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
x

19,122 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 2022-2023-ம் கொள்முதல் பருவத்தில் இதுவரை 19,122 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருப்பின் இலவச டெலிபோன் எண் 1077-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிபக்கழகம், விருதுநகர் டெலிபோன் 04562 252607 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story