எடப்பாடி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு 5 லட்சம் கரும்புகள் கொள்முதல்


எடப்பாடி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு 5 லட்சம் கரும்புகள் கொள்முதல்
x
தினத்தந்தி 7 Jan 2023 7:30 PM GMT (Updated: 7 Jan 2023 7:30 PM GMT)

எடப்பாடி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.5 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

சேலம்

எடப்பாடி:-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், ஓணாம் பாறையூர், வடக்கத்திக்காடு, மோளப்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பினை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் செங்கரும்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்கள் எடப்பாடி பகுதியில் முகாமிட்டு செங்கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட பொது வினியோகத் திட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் கந்தசாமி தலைமையில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மாணிக்கசுந்தரம், வேலப்பன், நர்மதா மற்றும் பெருந்துறை கூட்டுறவு வேளாண் மற்றும் விற்பனை சங்க பொது மேலாளர் பழனியப்பன் உள்ளிட்ட கூட்டுறவு அலுவலர்கள் இந்த பகுதியில் முகாமிட்டு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை மொத்த கொள்முதல் செய்து வருகின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு அதிகபட்சம் ரூ.400 வரை என இதுவரை 5 லட்சம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story