62 ஆயிரத்து 783 டன் குறுவை நெல் கொள்முதல்


62 ஆயிரத்து 783 டன் குறுவை நெல் கொள்முதல்
x

62 ஆயிரத்து 783 டன் குறுவை நெல் கொள்முதல்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 62 ஆயிரத்து 783 டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கூறினார்.

விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு

நாகை மாவட்டத்தில் 44 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தேக்கம் இன்றி நெல்லை கொள்முதல் செய்வதுடன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேக்கம் இல்லாமல் உடனுக்குடன் லாரிகள் மூலமும், ெரயில்கள் வாயிலாகவும் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையங்கள் மற்றும் தற்காலிக கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதபடி உடனுக்குடன் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

62 ஆயிரத்து 783 டன் நெல் கொள்முதல்

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் கூறுகையில்,

நாகை மாவட்டத்தில் 65 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாவட்டத்தில் 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதுவரை, 15 ஆயிரத்து 677 விவசாயிகளிடமிருந்து 62 ஆயிரத்து 783 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.129 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பருவமழையால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக சின்னதம்பூர், புத்தர்மங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள வேளாண் உற்பத்தி குழு கிடங்கு, கோவில்பத்து கிடங்கு, நாகை துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இவை காலதாமதம் செய்யாமல் ெரயில் வேகன்கள், லாரிகள் மூலம் அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 56 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைக்க வேண்டிய நெல் மூட்டைகள் தவிர மற்றவைகள் அனைத்தும் அரவைக்கு சென்று வழங்கல் துறை மூலமாக உணவிற்காக பயன்படுத்தப்படும்.

இலக்கை அடையும்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்காக போதுமான அளவிற்கு சவுக்கு கட்டைகள், கற்கள், சாக்குகள், தார்ப்பாய்கள் ஆகியவை உள்ளது. எனவே நாகை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் இன்னும் சில தினங்களில் இலக்கை அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story