720 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

720 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
ஆனைமலை
ஆனைமலை தாலுகாவில் காக்கா கொத்தி பாறை, வடக்கலூர் அம்மன் கோவில், குளப்பத்து குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் முதல் போகத்தில் கோ 50 ஏ.எல்.டி. மற்றும் ஏ.எல்.ஆர்.டி. உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை வாங்க கடந்த 20 நாட்களுக்கு முன்பே ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதில் சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,160 மற்றும் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115 என அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. மேலும் 17 சதவீதத்திற்கு உள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆனைமலை பகுதியில் 60 சதவீதம் நெல் அறுவடை முடிந்துள்ளது. தொடர்ந்து கடந்த 20 நாட்களில் சன்ன ரக நெல் 720 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 108 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த தகவலை நெல் கொள்முதல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.






