ரூ.27½ கோடிக்கு கொப்பரை கொள்முதல்


ரூ.27½ கோடிக்கு கொப்பரை கொள்முதல்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.27½ கோடிக்கு கொப்பரை கொள்முதல்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து ஆதார விலையான கிலோ ரூ.105.90-க்கு விற்பனை செய்தனர். இந்த நிலையில் அரசு அறிவித்தபடி நேற்று முதல் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் இஷாக் கூறும்போது, செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசின் ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி தொடங்கி இன்று(நேற்று) நிறைவு பெற்றது.

கடந்த 9 மாதத்தில் 2 ஆயிரத்து 160 விவசாயிகளிடம் இருந்து 52 ஆயிரத்து 302 மூட்டை கொப்பரை ரூ.27 கோடியே 69 லட்சத்து 39 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு வந்ததும் மீண்டும் கொள்முதல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். இதற்கிடையில் காங்கேயம், வெள்ளக்கோவில் போன்ற வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளதால், அரசு மீண்டும் கொள்முதலை தொடங்க தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story