கொள்முதல் விலை உயர்வு: ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்


கொள்முதல் விலை உயர்வு:  ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்
x

கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.

கிலோ ரூ.110-க்கு கொள்முதல்

கோவை மாவட்டகலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்திள் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம் மற்றும் செஞ்சேரி ஆகிய 3 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக அரசு அறிவித்துள்ளது. தற்போது, கொப்பரை கொள்முதலை அதிகரிக்க ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 2 நிறுவனங்களை கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறிவித்துள்ளது.

விவசாயிகள் பயன்பெறலாம்

இந்த கொள்முதலுக்கு பிப்ரவரி-2022 முதல் ஜூலை-2022 வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் ஒழுங்குமுறை விற்பளைக்கூட அதிகாரிகளை கீழ்கண்ட செல்போன் எண்ணில் பொள்ளாச்சி-7010615376, நெகமம்-9894687827, செஞ்சேரி-9751527708, ஆனைமலை-9976168113 மற்றும் கிணத்துக்கடவு-9865154644 அணுகி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story