தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய திருவிழா
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளையொட்டி வருகிற 8-ந் தேதி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் விழா நடைபெறும். இதையொட்டி சிவகாசி பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார், ஆர்.ஆர்.நகர் பங்கு தந்தை பீட்டர் ராய் அடிகளார், உதவி பங்குத்தந்தை அருள்தாஸ் அடிகளார் மற்றும் பங்கு இறைமக்கள் முன்னிலையில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. இதில் ஆர்.ஆர். நகர், கன்னி சேரி புதூர், கல்போது, முதலிப்பட்டி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், நிறைவாழ்வு நகர், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ேதர்பவனி
திருவிழாவினை முன்னிட்டு தினசரி மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை நவநாள் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு ஆலய வளாகம் மின் விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வருகிற 8-ந் தேதி மாலை 6 மணி அளவில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் ஏரோனியம் அடிகளார், மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அல்லரஸ் அடிகளார் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.