அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூர் செவிடு தீர்த்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா 100 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. விழாவையொட்டி கணபதி ஹோமம் நடைபெற்றது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. முனியாண்டி கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மந்தை காளியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மாலை செவிடு தீர்த்த அய்யனார் குதிரை (புரவி) எடுப்பு விழா நடந்தது. வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளில் அய்யனார், கருப்பசாமி குதிரை வாகனங்கள் வலம் வந்தன. அப்போது பெண்கள் வீட்டின் முன்பாக தீபமேற்றி, படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டன. பின்னர் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மச்சியார் அம்மனுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது. மறுநாள் காலை சக்தி கிடா வெட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கீழமாத்தூர் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


Next Story