புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை


புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
x

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனா்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 111 மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி எஸ்.சி.வி.மதுபாலா 490 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். எல்.மகாஜனனி மற்றும் எஸ்.சாதனா ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், சி.குருதர்ஷினி, வி.சுஜிதா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர். கணித பாடத்தில் 4 மாணவர்களும், அறிவியலில் 4 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவர்களும், 400-க்கு மேல் 66 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 104 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் காரிசன் ஜெபக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.


Next Story