புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா


புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:45 PM GMT)

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திரளான பக்தர்கள் தங்களது உடம்பில் செடல் குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story