மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டுகோள்


மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டுகோள்
x

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்ட (75 சதவீதத்திற்கு மேல்) மாற்றுத்திறனாளிகள், தண்டுவடம் பாதிக்கப்பட்டோர்- பார்கின்சன் நோய் மற்றும் நாள்பட்ட நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளானோர் என 5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத்திறனாளிகள் உயிருடன் உள்ளனர் என அறிய ஏதுவாகவும், தொடர்ச்சியாக உதவித்தொகை பெறவும் கிராம நிர்வாக அலுவலர் சான்றொப்பத்துடன் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றினை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story