நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது


நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
x

பாலக்கோடு அருகே நெல்வயலில் 15 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.

தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோடு அருகே சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். நேற்று காலை சண்முகம் தோட்டத்திற்கு சென்ற போது அறுவடை செய்த நெல்வயலில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதுகுறித்து அவர் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனசரகர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அவர்கள் திருமல்வாடி காப்புக்காட்டில் மலைப்பாம்பை விட்டனர்.


Next Story