பொட்டிரெட்டிப்பட்டி அருகே சாலையில் செத்து கிடந்த மலைப்பாம்பு


பொட்டிரெட்டிப்பட்டி அருகே  சாலையில் செத்து கிடந்த மலைப்பாம்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொட்டிரெட்டிப்பட்டி அருகே சாலையில் செத்து கிடந்த மலைப்பாம்பு

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டை பிரிவு சாலையில் மலைப்பாம்பு ஒன்று செத்து கிடப்பதாக எருமப்பட்டி வனவர் அருள்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் செத்து கிடந்த மலைப்பாம்பை கைப்பற்றி எருமப்பட்டி வன குடியிருப்புக்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் சேகர் தலைமையில் மலைப்பாம்பின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

அதிகாரிகளின் விசாரணையில் சாலையில் வந்த வாகனத்தில் சிக்கி மலைப்பாம்பு செத்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.


Next Story