குடோனில் பதுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது


குடோனில் பதுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய் குடோனில் 10அடி நீள மலைப்பாப்பு பிடிபட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி கிருங்காக்கோட்டை செல்லும் சாலையில் இளம்பருதி கண்ணன் என்பவர் தேங்காய் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் நேற்று மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் விரைந்து சென்று 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பை பிரான்மலையில் உள்ள காட்டு பகுதியில் விட்டனர்.


Next Story