விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன


விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள எமக்கல்நத்தம் காந்திநகரை சேர்ந்தவர் குணரூபன். விவசாயி. இவர் நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு ஒரு மலைப்பாம்பு இருந்தது. இதுகுறித்து அவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்த மலைப்பாம்பு விவசாய நிலத்தில் உள்ள சிறு ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அடியில் புகுந்து கொண்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அதில் 12 அடி நீளமுள்ள 3 மலைப்பாம்புகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தன், சின்னமுத்து, பொன்னுமணி 3 மலைப்பாம்புகளையும் பிடித்து கிருஷ்ணகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்புகளை விட்டனர்.


Next Story