கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

கொல்லிமலை அடிவாரத்தில் கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

கொல்லிமலை அடிவாரத்தில் வெண்டாங்கி கிராமத்தில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. அங்கு நேற்று கரும்பு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சுமார் 10 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நாமக்கல் வனச்சரகர் பெருமாள் வழிகாட்டுதல் பேரில் வனக்காப்பாளர் பிரவீன், காரவள்ளி சோதனை சாவடி உதவியாளர் கண்ணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் கரும்பு தோட்டத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story