சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு
மத்தூர் அருகே சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
மத்தூர்
மத்தூர் அருகே தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மயில்கள், மான்கள் மலைப்பாம்புகள் உள்ளன. இவைகள் காப்புக்காட்டின் நடுவில் கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் நெடுஞ்சாலைக்கு வருகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இந்த பாம்பு தார்சாலையை கடக்க முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனால் சாலையில் இருப்புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அந்த வழியாக வந்த பஸ் பயணி ஒருவர் மலைப்பாம்பின் வாலை பிடித்து இழுத்து காப்புக்காட்டில் விட்டார். இதையடுத்து அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story