வேளாண் தகவல்களை தெரிந்துகொள்ள கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்படும்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு


வேளாண் தகவல்களை தெரிந்துகொள்ள கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்படும்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு
x
தினத்தந்தி 20 May 2023 1:00 AM IST (Updated: 20 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் தகவல்களை தெரிந்துகொள்ள கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

கோயம்புத்தூர்

நெகமம்

வேளாண் தகவல்களை தெரிந்துகொள்ள கியூ-ஆர் கோடு அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

விழிப்புணர்வு கூட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், மூலனூர் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து தென்னை நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உர மேலாண்மை எனும் தலைப்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பேசினார். கோவை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

கியூ-ஆர்., கோடு

அமைச்சர் சாமிநாதன் பேசும்போது கூறியதாவது:- நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும், இனி வரும் காலங்களில் வேளாண் சார்ந்த தகவல்களுக்கு கியூ.ஆர்., கோடு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக விவசாயிகள் எளிதில் விவசாயம் சார்ந்த தகவல்களை பெறலாம்.மேலும், விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஏற்படும் தென்னை நோய் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் இணைந்து இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

நடவடிக்கை

கொங்கு மண்டலத்தில் குறுகிய காலப் பயிர் விவசாயத்தில், ஆள் கூலி, தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் விவசாயிகளுக்கு பெரிதாக லாபம் ஈட்ட முடியாத நிலை உள்ளது. அதற்கு மாற்றாக தென்னை விவசாயம் அவர்களுக்கு கைகொடுத்து வருகிறது. மேலும், வேளாண் துறைக்கு என்று நிதி நிலை அறிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் தென்னையில் ஏற்படும் நோய்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story